நாடு முழுவதும் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

நாடு முழுவதும் 18 வீடுகளை உடைத்து கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 30 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டதற்கான ஆவணங்களும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிமட, ஊவாபரணகம, எஹெலியகொட, எல்பிட்டிய, செவனகல, வெல்லவாய உடப்ட பிரதேச வீடுகளில் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.