போதையில் சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

திருகோணமலை 05ஆம் கட்டைப்பகுதியில் தனியார் பேருந்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீனக்குடா, கொட்பே பகுதியைச் சேர்ந்த ஜீ.ஜீ.எஸ்.புஸ்பகுமார (23வயது) என்பவரே விபத்தில் படுகாயமடைந்தவர் எனவும் தெரியவருகின்றது.

அம்பாறையிலிருந்து, திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்துடன், மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரே மோதுண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.