கணவன், மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட யாழ் இளைஞன் மீது சராமரியாக கத்திக்குத்து !

நீதிமன்றில் வழக்குக்கு வந்து விட்டு வெளியே வந்த பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார் வவுனியா கல்வளையைச் சேர்ந்த நபர்.

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்றது. காயமடைந்தவரை சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்ப்பித்து விட்டு, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் கத்தியால் குத்தியவர்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

வவுனியா கல்வளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளுடன் வாழ்ந்த குடும்பத்துடன் பழகி குடும்பப் பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார் இளைஞன். இதனையறிந்த பெண்ணின் கணவன் பல தடவைகள் இளைஞருக்கு அறிவுரைகள் கூறியும் செவிமடுக்காமல் கள்ள உறவைத் தொடர்ந்ததால் ஆத்திரமுற்ற கணவன் குறித்த இளைஞர் சாவகச்சேரி நீதிமன்றுக்கு வருவதையறிந்து பேருந்து நிலையத்தில் காத்திருந்து நீதிமன்றிலிருந்து வரும் போது மார்பிலும் முதுகிலும் பல தடவைகள் கத்தியால் குத்திக் காணப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த இளைஞரை தானே முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்ப்பித்து விட்டு, தானும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.