உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கிளிநொச்சி: முன்னாள் போராளி பரிதாபமாக பலி!

கடற்படையினரின் உழவு இயந்திரத்தில் மோதி வீதியில் தூக்கி வீசப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அடைக்கலம் கொன் சலஸ் (வயது 42) என்பவரே மேற்படி உயிரி ழந்தவராவார்.

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் தங்கியிருந்து கடற்தொழில் செய்துவரும் குறித்த நபர், கிளிநொச்சியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

சங்குப்பிட்டி- கேரதீவு வீதியில் கடற்படை யினருடைய உழவு இயந்திரத்தில் பொரு த்தப்பட்ட தண்ணீர் தாங்கி ஒன்று எந்தவித சமிஞ்ஞை விளக்குகளும் இன்றி நிறுத்தப்பட் டிருந்துள்ளது.

குறித்த உழவு இயந்திரத்தில் நீண்ட கம்பி ஒன்று பொருத்தப்பட்டிருந்த நிலையில் இந்த நபர் மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு வந்த போது குறித்த கம்பி முகத்தில் மோதி நிலை தடுமாறிய நிலையில் எதிரே நின்ற உழவு இயந் திரத்தில் மோதுண்டு வீதியில் தூக்கி வீசப்பட்டார்.

அந்த சமயம் யாழ்ப்பாணத்தில் இருந்து அருட்தந்தையர்களை ஏற்றி சென்ற கார் ஒன்று குறித்த நபர் மேல் மோதியது. காரின் சில்லுக்குள் நசியுண்டு சம்பவ இடத்திலேயே குறித்தநபர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்ப வம் தொடர்பாக பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.