உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

துன்னாலை பகுதி காட்டுக்குள் கசிப்பு முற்றுகை!!

துன்னாலை வலிகண்டி பகுதியில் உள்ள காடு ஒன்றில் கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20லீற்றர் கசிப்பு மற்றும் 2லீற்றர் கோடா என்பனவும் கைபெற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஐகதான நபர் குடவத்தை பகுதியினை சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர். கிடைக்கபெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று மாலை கசிப்பு காடு முற்றுகையிடப்பட்டது.

இதன் போது பணை மர கூடலுக்குள் மறைவிடம் அமைத்து சிலர் கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பொலிஸார் செல்வதை கண்டதுடன் ஏணைய சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கசிப்பு வடிப்பதற்கு பயண்படுத்திய சட்டி, பாணை வயர், பெரல் என்பனவும் கைபெற்றப்பட்டுள்ளது. கைதான நபரை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.