Trending News...

தேள், சிலந்தி, நல்ல பாம்பு கடித்தால் உடனடியாக விஷத்தை முறிக்கும் மாமருந்து…!

பாம்பு, நட்டுவாக்கலி, தேள், சிலந்தி ஆகிய விஷப் பூச்சிகளில் எது கடித்தாலும் உடனே பெருமருந்து வேரை வாயில் அடக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவத்தை பின்பற்றினால் விஷம் உடம்பில் ஏறாமல் தடுக்கலாம்.

பாம்பு கடிக்கு
வாழை மரத்தின் அடியில் வெட்டி, அதன் பட்டையை உரித்து மண் சட்டியில் அல்லது பீங்கான் கோப்பையில் சாறு பிழிந்து பாம்பு கடிபட்டவருக்கு உடனே கொடுக்க வேண்டும்.

பாம்பு விஷம் ஏறாமல் இருக்க
பெரியா நங்கை இலையை அரைத்து அதில் சிறிதளவு எடுத்து சாப்பிட்டு, அன்று முழுவதும் உப்பு இல்லாத பத்தியம் இருக்க வேண்டும். இதனால் பாம்பு கடி விஷம் உடனே போய்விடும்.

நட்டுவாக்கலி கடிக்கு
நட்டுவாக்கலி கடித்து விட்டால், உடனே ஒரு கொப்பரைத் தேங்காயை மென்று சாப்பிட வேண்டும். அதுவே குழந்தைகள் அல்லது வயது முதிர்ந்தவராக இருந்தால் தேங்காய் பாலை பிழிந்து கொடுக்க வேண்டும்.

தேள் கடிக்கு
நாயுருவியின் வேரை பச்சையாக மென்று, அதன் சாற்றை மட்டும் சாப்பிட்டால், தேள் கடியின் விஷம் உடனே இறங்கும்.

நாய் கடிக்கு
நாய் கடித்து விட்டால் செடி பட்டையை நசுக்கி வைத்து அதை நாய் கடித்த இடத்தில் வைத்து கட்டினால் அதன் நச்சு நீங்கும்.

சிலந்தி கடிக்கு
ஆடாதொடை மூலிகையை பச்சை மஞ்சள் மற்றும் மிளகுடன் சேர்த்து அரைத்து, அவற்றை சிலந்தி கடித்த இடத்தில் வைத்து உடனே கட்ட வேண்டும்.

குறிப்பு
மேலே கொடுக்கப்படுள்ள மருத்துவம் அனைத்தும் விஷப் பூச்சிக்கடிக்கு உரிய முதலுதவிகள் மட்டுமே, இவற்றை பின்பற்றிய பின் மருத்துவமனையை நாடுவது மிகவும் அவசியம்