ஜடேஜாவுக்கு பதில் அஷ்வின்

இரானி கோப்பை போட்டிக்கான ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியில், காயத்தால் விலகிய ரவிந்திர ஜடேஜாவுக்கு பதில் அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாக்பூரில், இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 14–18ல் நடக்கவுள்ளது. இதில் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’, ‘நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன்’ விதர்பா அணிகள் விளையாடுகின்றன. ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா இடம் பிடித்திருந்தார். ஆனால், இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ள ஜடேஜா, இப்போட்டியில் இருந்து திடீரென விலகினார்.

இதனையடுத்து இவருக்கு மாற்று வீரராக தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் காயம் காரணமாக தியோதர் டிராபி தொடரில் இருந்து விலகிய அஷ்வின், தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளார்.