Loading... Please Wait.

பருத்தித்துறை புலோலி விபத்தில் இரண்டு வயதுக் குழந்தை படுகாயம்!!

வான் ஒன்று முதன்மைச் சாலையை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இரண்டரை வயதுக் குழந்தை படுகாயமடைந்தது.

இந்த விபத்து புலோலி தெற்கு சாரையடியில் இன்று காலை நடந்தது.

பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

close