உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மட்டுவிலில் ஆலயத்திற்குச் சென்ற பெண் விபத்தில் பலி!

பங்குனித்திங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொட்டிருந்த பெண் ஒருவர் வீதியில் சறுக்கிவிழுந்து காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்றையதினம் காலை 5:00 மணியளவில் யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றபோதே இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் மட்டுவில் தெற்கு பகுதியில் வசித்துவரும் 53 வயதுடைய விஜகாந்தன் சுசிகலா என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.