வவுனியா: குடும்ப தகராறை தடுக்க சென்ற பெண்ணுக்கு நோ்ந்த விபரீதம்!!

வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்து ஒருவர் வவுனியா வைத்திய சாலையிலும் இன்னுமொருவர் கொழும்பு தேசிய வைத்திய சாலையிலும் அனுமதிக்க பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

செட்டிகுளம் பிரதேசத்துக்கு உட்பட்ட வீரபுரம் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தமையால் இருவரும் சில மாதங்களாக பிரிந்து இருந்ததுடன் விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றையதினம் மதியம் குறித்த பெண் தனது சிறிய தாய் வீட்டில் இருந்ததுடன் அங்கு சென்ற கணவன் அவரை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த பெண்ணின் உறவினர் ஒருவரும் பெண்ணின் சிறிய தாயும் தடுப்பதற்காக குறுக்கே சென்ற சமயம் அவர்கள் இருவர் மேலும் வெட்டு காயம் ஏற்பட்டதுடன் சிறிய தாயின் மணிக்கட்டு பகுதி முற்று முழுதாக துண்டிக்கப்பட்டதுடன் துண்டிக்க பட்ட பகுதியுடன் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு உடனடியாக கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டார்.

குறித்த சம்பவத்தில் 33 வயதுடைய பெண்ணே கைப் பகுதி துண்டிக்க பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் 45 வயதுடைய நபா் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக செட்டிகுளம் பொலிஸாா் ஒருவரை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.