Trending News...

வல்வை சந்தி பகுதியில் விபத்து, ஒருவர் பலி!

வடமராட்சி வல்லைவெளியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளா் தெரிவித்தாா். இன்றையதினம் (03-03-2018) 8 மணியளவில் இந்த விபத்து வல்லைவெளியில் சம்பவித்துள்ளது. வேலைமுடித்து வல்லை வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவா் மீது முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகவும், இந்த நிலையில் சைக்கிளில் பயணித்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் எமது செய்தியாளா் தெரிவித்தாா்.

அத்துடன் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி வீதியில் புரண்டு விழுந்துள்ளதுடன், சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.அத்துடன் விபத்தினை ஏற்படுத்திய சாரதியை தேடும் முயற்சியில் பொலிஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

குறித்த விபத்தில் 60 வயதுடைய முதியவா் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.