Trending News...

கிளிநொச்சி பொது சந்தையில் கத்திக் குத்து!

கிளிநொச்சி பொது சந்தையில் அமைந்துள்ள மரக்கறிகள் வாணிபத்திற்குள் நேற்று பிற்ப்பகல்  கத்தியுடன் புகுந்த ஒருவர் மரக்கறி வியாபாரி ஒருவருக்கு கத்தியால் குத்தியதில் கையில் காயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் அத்துடன் கத்தியால் குத்திய நபரும் தாக்குதலுக்குள்ளானதில் காயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி குற்றப்பிரிவுப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.