மாணவனை கத்தியால் சரமாரியாக குத்திய பள்ளி மாணவர்

நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சக மாணவனை கத்தியால் குத்திய 9-ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.

களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்ணன் என்ற மாணவர் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் வகுப்பு தலைவராகவும் அவர் இருந்து வருகிறார். அதே வகுப்பில் மென்சியா என்ற மாணவரும் படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் மென்சியா ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக ஆசிரியரிடம் கண்ணன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் மென்சியா, வகுப்ப‌றையை சுத்தம் செய்துகொண்டிருந்த கண்ணனை கத்தியால் குத்தினார். கை, விலா, தொடைப்பகுதி ஆகிய இடங்களில் கத்தியால் குத்திவிட்டு மென்சியா அங்கிருந்து தப்பிவிட்டார். இந்நிகழ்வு குறித்து விசாரித்து வந்த களக்காடு காவல் துறையினர் மென்சியாவை கைது செய்து பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். கத்தி குத்துக்குள்ளான மாணவன் கண்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close