Trending News...

கொடிகாமத்தில் ஆசிரியை மற்றும் சகோதரி மீது வீடு புகுந்து வாள் வெட்டு!!

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் வீடு புகுந்த வாள்வெட்டுக் குழு ஆசிரியை உட்பட அவரது சகோதரியையும் வெட்டிவிட்டு சென்றுள்ளதாக யாழிலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகத்தை மறைத்துக்கொண்டு வீட்டினுள் அத்துமீறி நுழைந்த நான்கு போ் அங்கிருந்த ஆசிரியை மற்றும் அவரது சகோதரியையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.