Trending News...

திடீரென யாழில் மரணமடையும் உயிரினங்கள்!

யாழ்ப்பாணம் - காரைநகர் உட்பட பிரதேசங்களில் குடிநீரின்றி கால்நடைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரேந்து பகுதிகளில் நீர் அருந்த செல்லும் கால்நடைகள் சேற்றுக்குள் சிக்கி உயிரிழப்பதாக கால்நடை பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 நாட்களில் காரைநகர் பிரதேசத்தில் 2 மாடுகள் சேற்றுக்குள் சிக்கி கண்டுபிடிக்க முடியாமல் போனமையினால் உயிரிழந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலைமையின் காரணமாக தற்போது கால்நடை உரிமையாளர்கள் மாடுகள் தொடர்பில் கடுமையான அவதானத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த பல மாதங்களாக அந்த பிரதேசங்களில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக மாடுகள் நீர் அருந்தும் அனைத்து நீர்த்தேக்கங்களும் வற்றி போயுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண கால்நடை பண்ணை உரிமையாளர்கள தெரிவித்துள்ளனர்.