உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது! இலங்கை விவகாரம்

நடிகர் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி நிகழ்ச்சியின் ஹீரோவாக இருக்கிறார். முன்னனி டிவி சேனல் ஒன்றில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் தனக்கு பெண் தேடி வருகிறார்.

கடைசியில் வெற்றி பெறும் அந்த ஒரு பெண்ணை ஆர்யா திருமணம் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. 16 பெண்கள் கலந்துகொண்டு தற்போது 8 பெண்கள் மட்டுமே இந்த போட்டியில் இருக்கிறார்கள்.

ஆனால் நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகளும், புகார்களும் வந்துகொண்டிருக்கிறது. சமூக நல ஆர்வலர்கள் சிலர் இதன் மீது நீதிமன்ற வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஷுட்டிங் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த சிலர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

பதட்டமான நிலவியதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.