10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு தலையில் கல்லை போட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா நகரில் 6 பேரால் சிறுமி கற்பழிக்கப்பட்டு பின் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் சென்றிருந்தார். அப்போது அங்கு மணமகனின் நண்பர் உத்தம் சாஹூ (25) என்பவரும் வந்திருந்தார்.

இந்நிலையில் திருமண ஊர்வலம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் 10 வயது சிறுமியை உத்தம் சாஹூ கடத்தி சென்றுவிட்டார். பிறகு அந்த கிராமத்தில் உள்ள வறண்ட ஆற்று பகுதியில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமியை ஈவு இரக்கமின்றி தலையில் கல்லை போட்டு நசுக்கி கொலை செய்துள்ளார். சிறுமியின் உடலை அங்கேயே புதைத்துவிட்டார்.

இதனிடையே சிறுமியை காணாது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் உத்தம் சாஹூவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.குண்டா போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ரெஹட்டா கிராமத்தை சேர்ந்தவர் சாஹூ.