உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

டாக்டர்களின் முயற்சியால் உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத குழந்தை உயிர் பிழைப்பு.

உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத  குழந்தையின் உயிரை, டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து காப்பாற்றியுள்ளனர்.
பெங்களூரில் ஒருவரின் 11 மாத ஆண் குழந்தை வீட்டில் விளையாடியபோது மீன் தொட்டியில் நீந்தி கொண்டிருந்த மீனை எடுத்து வாயில் விழுங்கியது.
இதனால் குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. மேலும் மூச்சு விடவும் சிரமப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் வயிற்றிலிருந்த மீனை மருத்துவர்கள், என்டோஸ்கோபி மூலம் வெளியே எடுத்தனர். இதனால் குழந்தை உயிர் பிழைத்தது. மருத்துவர்களின் துரித செயலால் குழந்தை காப்பாற்றப்பட்டது என குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர். மருத்துவர்களின் இந்த செயலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.