உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

லாரி - வேன் மோதல்: 2 பேர் பரிதாப பலி: 10 பேர் படுகாயம்

[post_ads]பெருந்துறை: பெருந்துறை அருகே இன்று அதிகாலை சுற்றுலா வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிலேட்டர் நகர் மற்றும் கள்ளியம்புதூர் பகுதியை சார்ந்த 15க்கும் மேற்பட்டோர் நேற்று கேரள மாநிலம் அங்கமாலி பகுதியில் உள்ள குரூஸ் மலை சர்ச்சுக்கு சென்று விட்டு இன்று அதிகாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
காலை 5 மணியளவில் வேனில் இருந்த சிலரை கள்ளியம்புதூர் பகுதியில் இறக்கி விட்டு விட்டு சிலேட்டர் நகருக்கு வந்தபோது சீனாபுரம் பிரிவில் பெங்களூரில் இருந்து துணி பண்டல் ஏற்றி கோவையை நோக்கி சென்ற லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதின.
[post_ads]
இதில் வேன் டிரைவர் பொன்னுசாமி (30) மற்றும் கூடுதல் ஓட்டுனர் சிவா(30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். லாரி ஓட்டுனர் தேனியை சார்ந்த உதயசூரியன் (55), மற்றும் அவருடன் வந்த அதே பகுதியை சார்ந்த ஜெகநாதன் (45), பன்னீர்செல்வம் (50) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் வேனில் வந்த பெருந்துறை சிலேட்டர் நகர் பகுதியை சேர்ந்த ரேவதி(22), பிரிசில்லா (35), ஆதிரா(27), இவரது மகள் தியா(5), தீபா(57), ராம்குமார்(19), சகுந்தலா (48) ஆகியோரும் படுகாயமடைந்தனர்.
[post_ads]
இவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.