உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய சட்டம்.

பயணிகள் போக்குவரத்திற்காக ஈடுபடும் முச்சக்கரவண்டிகளில் மீட்டர் பொருத்தப்படல் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.[post_ads]

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முச்சக்கரவண்டி சேவையின் தரத்தையும் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் போக்குவரத்திற்காக ஈடுபடும் முச்சக்கரவண்டிகளில் மீட்டர் பொருத்தப்படல் கடந்த முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் சில சாரதிகளின் கோரிக்கைக்கு அமைய 20 ஆம் திகதி வரை அதனை பிற்போடப்பட்டதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட குறிப்பிட்டார்.