இன்றய ராசிபலன் 2018.04.22


வருமானம் திருப்தி தரும் நாள். வம்பு, வழக்குகளைச் சமாளித்து வளம் காண்பீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை ஏற்படும். உறவினர் வழிப்பிரச்சினைகள் அகலும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நாள். தொட்ட காரியத்தில் வெற்றி ஏற்பட துணையாக நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோக முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எந்தக்காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என செய்ய இயலாது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க அதிகமாகச் செலவிட நேரிடலாம். விரதம், வழிபாடுகளில்அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.

பொன்னான நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தூரதேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். தொழில் ரீதியான பயணங்களால் பலன் கிடைக்கும்.

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனக்கசப்புகள் மாறும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரலாம். வருமானம் திருப்தி தரும்.

உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம்மகிழ்வீர்கள். எதிரிகள் விலகுவர். உடல் நலம் சீராகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் ஆலோசனை கைகொடுக்கும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

செலவுகள் கூடும் நாள். சேமிப்புக் கரைகிறதே என்று கவலைப்படுவீர்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு உங்களிடமே திரும்பி வரலாம். குடும்பப் பெரியவர்கள் உங்கள் செயலில் குறைபாடுகள் காண்பர்.

தெய்வீக நாட்டம் அதிகரிக்கும் நாள். தெரியாததை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் மாறும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.

வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகலாம். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் உண்டு.

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வாகன யோகம் உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.