முச்சக்கரவண்டி கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

கம்பளை – தொலுவ பிரதான வீதியின் துன்தெணிய சந்தியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (10.04.2018) மாலை 05.00 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தையுடைய வரகாபொல, மெதிரிகிரிய மற்றும் கம்பளை மாவெல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 82, 72 மற்றும் 74 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஒருவர் படுகாயங்களுக்குட்பட்ட நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி கால்வாய் ஒன்றில் கவிழ்ந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.