உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

புத்தாண்டை முன்னிட்டு 4 நாட்கள் மூடப்படவுள்ள மதுபான சாலைகள்..முறைகேடுகள் சம்மந்தமாக அறிவிக்கவும் முடியும்

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் மது குற்றங்கள் மற்றும் மதுபான விற்பனைக்கு உரிமம் பெற்ற இடங்களில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு வேலைத்திட்டமொன்று மதுவரி திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பில் 0112 045 077 தொலைப்பேசி இலக்கத்திற்கு அல்லது 0112 877 882 என்ற தொலைநகல் இலக்கத்துக்கு அறிவிக்குமாறு அந்த திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று தொடக்கம் எதிர்வரும் 15ம் திகதி வரை இந்த சிறப்பு வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை , எதிர்வரும் சித்திரை புத்தாண்டு மற்றும் விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 13, 14 ,29 மற்றும் 30ம் திகதிகளில் நாட்டின் அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.