உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு குடும்பத்தலைவர் சாவு.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். .

இந்தச் யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் இரவு 7.20 மணியளவில் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த தயா என அழைக்கப்படும் 55 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (02)  இரவு 7 மணியளவில் புறப்பட்ட இரவு தபால் சேவை தொடருந்து அரியாலை ப தாண்டிப் பயணித்துக்கொண்டிருந்த போது, பொதுமக்கள்பாவனைக்குட்படுத்தப்படாத புகையிரத கடவையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது எனப்பொலிஸார் கூறினர்.

சீவல் தொழில் செய்யும் குடும்பத்தலைவர் தனது சிறு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த போது, தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.