உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இலங்கை முழுவதும் நுட்பமான முறையில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் தம்பதியர்!

இலங்கையின் பல பகுதிகளில் நுட்பமான முறையில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புள்ளை – சிசிர வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து நுட்பமான முறையில் இந்த தம்பதி கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் நுட்பமான முறையில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தம்புள்ளை – சிசிர வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து நுட்பமான முறையில் இந்த தம்பதி கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

தம்புள்ளை, மாத்தளை, கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் கதவுகளை திறந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். உபகரணங்களை பயன்படுத்தி காரின் கதவை திறந்து பெறுமதியான உபகரணங்கள், கையடக்க தொலைபேசிகள், கடன் அட்டை, பணப்பை ஆகியவற்றை திருடிய தம்பதியை கடந்த 6ஆம் திகதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் 34 வயதுடைய ஆண் மற்றும் 30 வயதுடைய பெண்ணாகும். அவர்களுக்கு நான்கு மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இவர்கள் இடைக்கிடையே பிரதேசங்களை மாற்றி நாட்டின் பல பகுதிகளில் கொள்ளை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பல மோசடிகளில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இந்த தம்பதியினர் கிட்டத்தட்ட 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றை திருடி அதன் பொருட்களை பிரித்து விற்பனை செய்துள்ளனர்.
இந்த தம்பதியினர் தம்புள்ளை பிரதேசத்தில் 8000 ரூபாய்க்கு மாதாந்த வாடகை அடிப்படையில் வீடு ஒன்றை பெற்றுக் கொண்டு இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.