உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

போராடும் மக்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கிய படையினர்

போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கு கேப்பாபுலவு மக்களுக்கு படையினர் இனிப்பு பண்டங்கள் வழங்கி புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

தங்களுடைய பூர்வீக நிலத்தை விடுக்க கோரி முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் 413 ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து தங்களின் சொந்த நிலத்தை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தருமாறு கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

குறித்த மக்கள் இரண்டாவது சித்திரை புத்தாண்டையும் வீதியில் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் மலர்ந்திருக்கும் சித்திரை புத்ததாண்டை வரவேற்ற படையினர் கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொள்ளும் மக்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கி வைத்துள்ளனர்.

இதன்போது, கேப்பாபுலவில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைத்த தலைமையகத்தின் மக்கள் தொடர்பாளர் அதிகாரி லெப்ரினன் கேணல் அபேவர்த்தன தலைமையிலான ஆண், பெண் படையினர் சிங்கள கலாச்சாரத்திற்கு அமைவாக உடை அணித்து இனிப்பு பண்டங்கள் கொண்டுவந்து போராட்ட களத்தில் உள்ள மக்களுடன் பரிமாறிக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.