யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரம்!! குழந்தையின் கழுத்தி கத்தி வைத்த கொள்ளையர்கள்!!

யாழ். அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (15.04.2018) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். அளவெட்டி, மகாத்மா வீதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த 3 கொள்ளையர்கள் குழந்தையின்
கழுத்தில் கத்தியை வைத்து 15 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த மூன்று கொள்ளையர்களும் தலைக்கவசம் அணிந்து முகத்திற்கு கறுப்புத் துணி கட்டி
இருந்துள்ளார்கள்.

இவர்கள் வீட்டில் இருந்த குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து, வீட்டில் இருந்தவர்களை சத்தம்
போடக் கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த 15 பவுண் பெறுமதியுடைய நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்
சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் போது மிளகாய்த் தூளை வீடு முழுவதும் தூவி விட்டு சென்றுள்ளனர்.