உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கிளிநொச்சி – எட்டு வயது சிறுவனை பலியெடுத்த கிணறு !

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் உள்ள பாதுகாப்பாற்ற கிணற்றிலிருந்து இன்று சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் கனிஸ்டன் என்ற 8 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுவனின் அகால மரணம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது