உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழ்ப்பாணத்தில் வீடொன்றிலிருந்து பெருந்தொகை குண்டுகள் மீட்பு !

யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றின் வளவில் பெருந்தொகை கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பளையிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து 40 கைக்குண்டுகளை மீட்டதாக அந்தப் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.[post_ads]

பலை வீமன்காமன் பிரதேசத்தில் ஜே.232 பிரதேசத்தில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்தே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று காலை கிணற்றினை சுத்தம் செய்ய சென்ற சிலரினால் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

கண்ணி வெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பின் அதிகாரிகளும் பொலிஸாரும் கிணற்றை சோதனையிட்ட பின்னர் 40 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவை மிகவும் பழைமையானதெனவும், யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.