யாழ். மயிலிட்டி பகுதியில் இருந்து பழைய ஆயுதங்கள் மீட்பு

யாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

வீட்டின் உரிமையாளர்கள், குறித்த வீட்டினை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை நீர்த்தொட்டிக்குள் பழைய ஆயுதங்கள் இருப்பதை அவதானித்துள்ளனர்.

தொடர்ந்து வீட்டு உரிமையாளர் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம் பலாலி இராணுவத்தினர் சென்று கண்ணிவெடிகள் மற்றும் பழைய ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

இராணுவத்தின் பாவனையில் இருந்த பகுதியில் அண்மையில் பொது மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வெடிபொருட்கள் இருப்பதை பொதுமக்கள் அவதானித்தால் அவற்றினைக் கையால் தொடாமல் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இராணுவ முகாம்களிற்கோ அறிவிக்குமாறும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .