வலைதளத்தில் வைரலாகும் புருவப் புயல் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

இணையப்புகழ் பிரியா பிரகாஷ் வாரியரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!

புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்றவர் பிரியா வாரியர். மலையாள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தில் இடம் பெற்றுள்ள மாணிக்ய மலரே பூவி பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர்.

குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டிய இவரின் பெயரை பயன்படுத்தினாலே பேஸ்புக்கில் லைக்ஸ் கொட்டி தள்ளுகிறது.

இந்நிலையில் இவர் தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. முன்னதாக இவரும், இவரது இணை நடிகர் ரோஷனும் இணைந்து வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.