நவீன வசதிகளுடன் துபாயில் மிதக்கும் நட்சத்திர ஓட்டல்

இங்கிலாந்து  மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பெயரை தாங்கிய பிரமாண்டமான சொகுசு கப்பலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் துபாய் அரசு 100 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் கொடுத்து வாங்கி, அதனை மிதக்கும் ஓட்டலாக மாற்ற திட்டமிட்டது. ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்திட்டம் அப்போது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது பிரம்மாண்ட முறையில் நிறைவேற்றப்பட்டு, மினா ரஷீத் துறைமுகத்தில் கப்பல் மிதக்கும் ஓட்டலாக மாற்றப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு 25 கடற்பயணங்களில் 25 லட்சம் பயணிகளை சுமந்து சென்ற அந்த கப்பல் இப்போது, 1300 அறைகள், 13 உணவகங்கள், பார்கள், சூதாட்ட அரங்குகள், அருங்காட்சியத்துடன் ஓட்டலாக உருமாறி நிற்கிறது. பிரம்மிக்க வைக்கும் இந்த கப்பல் ஓட்டல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.