யாழில் டிப்பருக்குள் சிக்குண்ட இளைஞன் காலை இழந்தார்!!

யாழ்ப்பாணம் ஆனைப்பந்நி சந்திக்கருகில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு,வலது கால் முற்றாக சிதைவடைந்த நிலையில் உயிரை காக்கும் நோக்குடன் முழங்காலிற்கு மேல் நீக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனைபந்தி சந்திக்கருகில் நேற்று இரவு 9.30 மணியளவில் டிப்பர் வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மிக ஆபத்தான நிலையில் யாழ். போதான வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.