தம்புளையில் சிக்கிய கஞ்சா வியாபாரிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கஞ்சா சப்ளை!!
யாழ்ப்பாணத்திலிருந்து கேரள கஞ்சாவை கடத்திச் சென்று மொத்த, சில்லறை வியாபாரத்தில் ஈடுபடும் முக்கிய போதைப் பொருள் முகவரை தம்புள்ளை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கேரள கஞ்சாவை கடத்திச் சென்று மொத்த, சில்லறை வியாபாரத்தில் ஈடுபடும் முக்கிய போதைப் பொருள் முகவரை தம்புள்ளை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
“கலேவெல – ஏனமல்பொல பிரதேசத்தில் வைத்து நேற்று (21) சனிக்கிழமை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
சந்தேகநபர் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த போது, சிறப்பு அதிரடிப் படையினரின் வீதிச் சோதனையில் சிக்கிக்கொண்டார். அவர் சில்லறைக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் ஒருவருக்கு விநியோகிக்க என 2 கிலோ கஞ்சாவை கொண்டு சென்றார் என விசாரணையில் தெரிய வந்தது.
சதார்டீன் செலாப்டீன் (வயது -57) என்பவரே கைது செய்யப்பட்டார்.