ராகிங் கொடுமையால் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்த மாணவன்..

உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவர் சத்யம் குமார் (வயது 23). இவர் தனது சக மாணவர்களால் ராகிங் செய்து கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சத்யம் குமார்,  நேற்று ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் டைரி ஒன்றில் தனது முடிவிற்கான காரணம் பற்றி எழுதி வைத்து உள்ளார்.

ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் ஞாயிற்றுக்கிழமை மாலை 28 வயது பெண் ஒருவர், முசாபர்நகர் ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.