Trending News...

ஆசிரியரின் கொடூர தாக்குதலால் சிறுமி வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவில் ஆசிரியரின் கொடூர தாக்குதலால் சிறுமி வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரையே ஆசிரியர் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கறிப்பட்டமுறிப்பு பாடசாலையில் கல்வி கற்கும் 10 வயதான மாணவி, கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்கு சமூகமளிக்காததன் காரணமாக குறித்த ஆசிரியர், மாணவியை தாக்கியதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் கைகள், கால்களில் தழும்புகள் காணப்பட்ட நிலையில், காயமடைந்த சிறுமியை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.