ஓடும் ரெயிலில் குழந்தை பெற்ற பெண்..

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் நேற்று இரவு தனது கணவருடன் பயணம் செய்தார். திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ரெயிலானது சிட்டாபூர் ரெயில் நிலையத்தை அடைந்த போது டாக்டர் மற்றும் பெண் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு மிகுந்த வலி ஏற்பட்டதால் ரெயில் பெட்டியிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. பெண் பயணிகள் சிலர் உதவி புரிந்தனர். இந்நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஓடும் ரெயில் பெண்ணிற்கு பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.