ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ள சம்பவம்

தேற்றாத்தீவில் ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென எரிந்து சேதமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம்மானது  (15.04.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 08.15 மணியளவில் இடம் பெற்றது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதி வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்து மோட்டார் சைக்கிளில் எற்பட்ட எரிபொருள் கசிவு காரணம் என்று குறித்த வாகனத்தின் சாரதியினால் தெரிவிக்கப்பட்டது.

எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயினை அயலவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனா்.

இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிள் பகுதியளவில் தீ விபத்தில் கருகியமை குறிப்பிடத்தக்கது.