மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து குதித்த காதல் ஜோடி : திரண்டு வந்த மக்கள்!!
மட்டக்களப்பு – கல்லடி பாலத்தில் இருந்து காதல் ஜோடியொன்று குதித்ததாக வெளியான தகவலையடுத்து அப்பகுதியில் பெருமளவான மக்கள் திரண்டதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லடி பாலத்தில் இருந்து இன்று பிற்பகல் ஆண் பெண் ஜோடியொன்று குதித்ததாக இனந்தெரியாதவர்களினால் பரப்பப்பட்ட தகவலை அடுத்து பெருமளவானோர் கல்லடி பாலத்தினை நோக்கி படையெடுத்து வந்ததை காணமுடிந்தது.
எனினும் இது தொடர்பான உறுதியாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.