உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பனியாக மாறிய நதி. வெடிகுண்டு வைத்து தகர்ப்பு

வடகிழக்கு சீனா மற்றும் ரஷ்யாவின் எல்லையில் ஹீலாங்ஜியாங் நதி உள்ளது. இந்த நதியானது, கடந்த வசந்த காலத்தில் பனியாக உறைந்தது . நதியின் நீர் அனைத்தும் பல அடி உயரம் கொண்ட பனியாக மாறியதால் நீர் வரத்து இல்லாமல் போனது.

இந்நிலையில், சீனாவின் மோஹி உள்ளிட்ட நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஹீலாங்ஜியாங் நதியின் உறைந்த பனியை வெடி வைத்து தகர்க்க சீன அரசு முடிவு செய்தது. அதன்படி, சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனியில் வெடிகுண்டுகள் பதிக்கப்பட்டு, பின்னர் வெடிக்க வைக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.