Trending News...

விபத்தில் உணர்வு இழந்த தோழனை கரம் பிடித்த ஆசிரியை..

கேரள மாநிலம் முன்னூர்கோடு பகுதியை சேர்ந்த சங்கரன்குட்டி- கல்யாணி குட்டியின் மகன் கணேஷ் (வயது 29). கேரள மாநிலம் செந்தியோடு பகுதியை சேர்ந்த ஹரிதாசன்- நளினி மகள் ஸ்ரீலேகா (27). கணேசும், ஸ்ரீலேகாவும் சித்தூர் அரசுக்கல்லூயில் படித்தபோது நண்பர்களானார்கள். மனம் விட்டு இருவரும் பேசி வந்தனர். படிப்பு முடிந்ததும் வேலை சம்பந்தமாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.

கணேஷ் ஆயுர்வேத மருந்து தொழிற்சாலையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினார். மருந்து விற்பனைக்காக சென்றபோது கடந்த 2006-ம் ஆண்டு மே 5-ந்தேதி விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு முதுகு தண்டுவடம் 2 ஆக பிளந்தது.

அவருக்கு சிகிச்சை அளிக்க கேரளாவில் உள்ள சிறந்த ஆஸ்பத்திரிகளை நாடினர். உயர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நாளடைவில் அவரது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டது. சிறிது சிறிதாக தலைக்கு கீழ் செயல்பாடுகள் மற்றும் உணவுர்களை இழந்தார். இனி சிகிச்சை அளிப்பது வீண் என்று டாக்டர்கள் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இருந்தாலும் மனம் தளராமல் சக்கர நாற்காலியில் அமர்ந்த கணேஷ் ஆன்-லைனில் வேலையாட்கள் மூலம் ஜவுளி வியாபாரம் செய்ய தொடங்கினார். ஒரு கட்டத்தில் விற்பனை சூடு பிடித்தது. இதனால் அவரது பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது.

இவரது தன்னம்பிக்கை குறித்து வெளியான செய்தியை படித்த கல்லூரி தோழி ஸ்ரீலேகா அதிர்ச்சியடைந்தார். ஸ்ரீலேகா அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். தனது தோழனுக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து வேதனை அடைந்தார்.

உணர்ச்சியற்ற தோழனுக்கு உதவ அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவரை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார். விருப்பதை ஏற்றுக்கொண்ட கணேஷ் திருமணத்திற்கு சம்மதித்தார்.

பெற்றோரின் ஏற்பாட்டின் பேரில் நேற்று குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.