யாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்டப் போட்டியின் போது பரிதாபகரமாக உயிரிழந்த இளைஞன்!!

யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் இன்று உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றுள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுள்ளது.

இதன்போது, குருநகர் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பத்மராஜன் எனும் இளைஞர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.