பேருவளை கடலில் மூழ்கி அண்ணனும் தங்கையும் உயிரிழப்பு.

பேருவளை கடலில் மூழ்கி அண்ணனும் தங்கையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கொழும்பைு, கிரேன்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய அண்ணனும், 24 வயதுடைய தங்கையுமே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பேருவளை பிரதேசத்தில், சிறிய தீவொன்றில் கலங்கரை விளக்கினை பார்வையிடச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

குடும்ப உறவினர்களுடன் சுற்றலா சென்றுள்ள அவர்கள், அந்த தீவில் உள்ள கற்பாறை ஒன்றில் உட்கார்ந்திருந்த போது எழுந்த பாரிய கடல் அலை ஒன்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.