கிணறொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை - கன்னியா பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.