உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மதம் மாறிய காலம் போய் பாலினத்தை மாற்றி காதல் திருமணம்

கேரளாவைச் சேர்ந்த காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் சூர்யா(25). இவர் சினிமாவில் துணை நடிகராக உள்ளார். 2013-ம் ஆண்டு சூர்யா, இசான் கேசா என்ற பெண்ணை சந்தித்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது,இருவரும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். காதலன் பெண்ணாவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, கடந்த 2014-ம் ஆண்டு சூர்யா ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறினார். அதேபோல் அவரது காதலி இசான் கேசா 2015-ம் ஆண்டு ஆபரேசன் மூலம் ஆணாக மாறினார். [post_ads]

இந்நிலையில் இவர்களது பெற்றோருக்கு, இருவரது வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி அடுத்த மாதம் கேரள அரசின் திருமண சிறப்பு திருத்த சட்டப்படி திருமணம் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறி திருமணம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.