வரதட்சணைக்காக மனைவியை கயிற்றில் கட்டி தொங்க விட்டு துன்புறுத்திய கணவர்..

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாகன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் தனது மனைவியிடன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 50 ஆயிரம் ரூபாயை வரதட்ணையாக கேட்டுள்ளார். பணம் தர மறுத்த தனது மனைவியை பெல்டால் அடித்துள்ளார். நான்கு மணி நேரம் கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அந்த பெண் மயக்கமடைந்தார்.

மயக்கமடைந்த தனது மனைவியை துப்பட்டாவை பயன்படுத்தி கைகளை கட்டி தொங்க விட்டார். பின்னர் அதனை வீடியோவாக பதிவு செய்து அந்த பெண்ணின் சகோதரர்க்கு அனுப்பினார். அத்துடன் பணம் தரும் வரை துன்புறுத்துக்கொண்டு தான் இருப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனை கண்ட பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அந்த பெண்ணை மீட்டு அவர் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். வரதட்சணைக்காக பெண் கயிற்றில் தொங்கவிடப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.