உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கதறக் கதற இளைஞரை பெல்ட்டால் அடித்த போலீஸ்!

பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறை அதிகாரி பெல்ட்டால் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் மாவ் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில், காவல்துறை அதிகாரி இளைஞர் ஒருவரை தூணில் கட்டிவைத்து பெல்ட்டால் சரமாரியாக தாக்குகிறார். இச்சம்பவம் நடைபெறும் போது, காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் யாரும் தடுக்கவில்லை.  மேலும் அந்த காவல் அதிகாரி, நான் எல்லாத்தையும் இப்படி தான் நடத்துவேன் என கூறிக்கொண்டே அடிக்கிறார். இது யாரோ ஒருரால் வீடியோ எடுக்கப்பட்டு சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்குதலுக்குள்ளான நபரின் உறவினர்கள் போலீஸ் அதிகாரிக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

11ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 13ஆம் தேதி காணாமல் போனதாக தெரிகிறது. இந்த மாணவி அவரது அத்தை வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவியை காணவில்லை. அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியை கடந்தி சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்கள் மாணவிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அவரை ஒரு இளைஞர் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து இப்படி செய்துள்ளார். கடத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கு பிறகு அந்த மாணவியை அவளது இருப்பிடத்தில் கொண்டு வந்து விட்டுள்ளார். மாணவி வந்ததும் அவரது பெற்றோர்கள் நேராக காவல்நிலையம் அழைத்துச் சென்று இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்தபெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை உறுதிபடுத்த முடியவில்லை. இதனால் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அந்த இளைஞரை காவல்துறை அதிகாரி தூணில் கட்டிவைத்து பெல்ட்டால் அடித்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டால் தான் அடிப்பதை நிறுத்துவேன் என காவல்துறை அதிகாரி மிரட்டியுள்ளார். நான் எல்லாத்தையும் இப்படி தான் நடத்துவேன் என்று கூறிக்கொண்டே அடித்துள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளது.