உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கொடூர வில்லனாக மாறிய நடிகர் சித்தார்த்

பாய்ஸ் படத்தில் நடித்து சாக்லெட் பாயாக வலம் வந்த நடிகர் சித்தார்த், தற்போது கொடூரமான வில்லனாக மாறியிருக்கிறார்.

சங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சித்தார்த். இப்படத்தை தொடர்ந்து ‘ஜிகர்தண்டா’, ‘எனக்குள் ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருக்கிறார். இந்நிலையில், தற்போது மலையாளப் படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

மலையாள நடிகர் திலீப் தற்போது ‘கம்மர சம்பவம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் நடிக்கிறார். இதில் கொடூரமான வில்லனாக சித்தார்த் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு ஹீரோவுக்கு சமமான வில்லன் கதாபாத்திரம் என்பதால் இதில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இந்தப் படத்தை ரதீஷ் அம்பட் இயக்கி வருகிறார். தற்போது இப்படம் இறுதி கட்டத்தில் உள்ளது.