இப்படியும் பெண்களா? சமூக வலைதளத்தால் சீரழியும் இலங்கை!

இலங்கை அம்பலங்கொடை சமூக சீர்கேடு செயலில் ஈடுபட்ட 11 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலங்கொடை பகுதியில் பேஸ்புக் நண்பர்கள் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.

அந்த விருந்தில், போதை பொருள்களான, கஞ்சா, அபீன் மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்த 11 நபர்களை மிட்டியாகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலபிட்டிய நீதவானிடம் பெற்றுகொண்ட ஆணைக்கு அமைய திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 200 – 250 பேர் அங்கிருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விருந்தில் பங்கேற்க வேண்டுமானால் 3000 ரூபாய் செலுத்தி டிக்கெட் பெற வேண்டுமாம். டிக்கெட் இல்லையென்றால் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லையாம்.

இந்நிலையில், பொலிசார் அந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தினை சுற்றி வளைத்த போது, ஆண்களை காட்டிலும் அதிகளவு இளம்பெண்கள் தான் இருந்தனர் எனவும் பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் பல இடங்களில் இவ்வாறான பேஸ்புக் நண்பர்களின் விருந்துகள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற விருந்துகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் பங்கேற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டிள்ளனர்.

இது குறித்து பெற்றோர்கள் மிகுந்த தங்கள் பெண் பிள்ளைகளிடம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.