பாடசாலை மாணவியை சீரழித்த காமுகன் கைது

ஒன்பது வயதான பாடசாலை மாணவியை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லவாய - ஹதபானாகல – ரந்தெனிகொடயாய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.[post-ads]

காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் மாமா என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் மனைவி அவரை கைவிட்டு சென்றுள்ள நிலையில், அவர் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

சிறுமி தனது தந்தை உயிரிழந்த பின்னர் பாட்டியின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்துள்ளதோடு, தன்னை ஒரு மாதம் அளவில் சந்தேக நபர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக சிறுமி, காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி தற்போது வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.